Happy republic day
ஜனவரி 26 ,2026
நான் வழக்கம் போல காலை 8 மணிக்கு விளையாட பள்ளி மைதானதிற்கு சென்றேன். சிறிது நேரம் மட்டைப்பந்து விளையாடினோம்.
பள்ளியில் NCC மாணவர்கள் ஒத்திகை செய்து கொண்டு இருந்தார்கள். எனக்கு தெறிந்த இரு பள்ளி மாணவர்கள் சண்டை போட்டுகொண்டார்கள். காலையிலே ஓர் மாணவனை பார்த்தேன் அவன் NCC சட்டை போட்டு இருதான் ஆனால் தொப்பி பெல்ட் ஷூ அணியவில்லை. கேட்டால் எங்க அம்மா ஏங்கேயோ போட்டு விட்டார்கள் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை என்று சொன்னான். இருவரும் கல்லை மாரி மாரி எறிந்து கொண்டார்கள். சிறிது நேரம் கழித்து சென்று இருவரையும் விசாரித்தோம். ஒருவன் நான் சீனியர் அவன் அடிபணிய வில்லை அதனால் தான் அடித்தேன் என்றான். அடித்தால் திருந்துவார்களா ? என்று கேட்டோம் , அந்த சீனியர் ஷூ ,பெல்ட் அணிய வில்லை ஏன் என்று கேட்டதற்கு அவன் எனக்கு தரவில்லை என சொன்னான்.
தலைமை சரியில்லை பின்பு எப்படி ஜூனியர் மதிப்பார்கள். நாங்கள் அதைப்பற்றி பேசிக்கொண்டு நடந்தோம். எல்லோருக்கும் சீனியர் தண்டனை கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். சில ஜூனியர் மைதானத்தை ஓடி வந்தனர். ஒரு காட்சி ஒரு சீனியர் அவனது காலணி ஒரு ஜூனியர் இடம் கொடுத்து வேறு இடத்திற்கு சென்று வைக்கச்சொன்னான் போலும். அவன் எங்களை கடந்து சென்றான். பார்த்ததும் அதிர்ச்சியளித்தது. சேருப்பை ஏந்தியவன் மெல்லிய தேகத்தை கொண்டு இருந்தான். வலியோர் எளியோர் அடிமை படுத்துவோர் என்பது உண்மை. அவனிடம் விசாரித்தோம் யார் உன்னிடம் கொடுத்தது அந்த பையனின் ஊர் முதலியன. நாம் எல்லோரும் மாரி செல்வராஜ் திட்டுகிறோம் எப்போ நடந்த கதையை இப்போ ஏன் கலரணும். இந்த சின்ன பைய்யன் அடுத்து படம் எடுத்தா என்ன படம் எடுப்பான்.
இங்கு சாதி இருக்கு ஏழை, பணக்காரன் என்று. இது இருக்கும் வரை எதோ ஒரு மக்கள் ஒருவரை ஒதுக்கதான் செய்வார்கள். இது தெரியாமல் முட்டாள் ஜனம் சண்டை போட்டுகொண்டு இருக்கிறோம். நாம் ஏழை என்றால் நம்மளும் தலித்தான்.
மாணவர்களை வழி நடத்துவோர் அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியர்தான். அதிகாரம் சரியான நபர்களிடம் சேரவேண்டும். அப்பொழுதுதான் நம் நாட்டுக்கு முழு குடியரசு.
அவரது ஆசிரியரிடம் நாங்கள் நடந்ததை சொன்னோம் அவர் அவர்களுக்கு "இங்கு யாருக்கும் யாரையும் தண்டனை கொடுக்கும் அதிகாரம் இல்லை". ஏதாவது என்றால் என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கடிந்துகொண்டார்.
Comments
Post a Comment